மலையாளம்- சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு ரூ. 3.5 கோடி மட்டுமே பட்ஜெட்!

இந்த ஆண்டு மலையாளத் திரையுலகம் ரூ. 150 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அதிகரித்த செலவுகள், படங்கள் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையால் ஏற்பட்ட நஷ்டம் இது.
இதையடுத்து மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டன. முடிந்தவரை செலவுகளைக் குறைத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து கேரள திரைப்பட வர்த்தக சபை செயலாளர் சுப்ரமணியம் கூறுகையில், சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கான தயாரிப்புச் செலவு ரூ. 3.5 கோடிக்கு மேல் போகக் கூடாது என்பது ஒரு முக்கிய முடிவு.
படப்பிடிப்பு 45 நாட்களுக்குள் முடிந்து விட வேண்டும். அதைத் தாண்டி போகவே கூடாது.
நெகட்டிவ் பிலிம் ரோல்கள் அளவு 60 ஆயிரம் அடியைத் தாண்டி ஓடி விடக் கூடாது.
ஒரு படத்தைத் தயாரிக்க ஆகும் செலவில் 60 முதல் 65 சதவீதம் வரை கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளத்திற்கே போய் விடுகிறது என்றார் அவர்.
தமிழத் திரையுலகைப் போல அல்லாமல் மலையாளத்தில் மிக மிக குறைந்த அளவிலேயே சம்பளங்கள் வழங்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கே அங்கு மிகக் குறைந்த சம்பளம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோகன்லால் நடிக்க ஜோஷி இயக்கவுள்ள ஒரு படத்தைத் தயாரிக்க ரூ. 5 கோடி வரை தேவைப்படும் எனத் தெரிய வந்ததால் அந்தப் படத்தையே கிடப்பி்ல் போட்டு விட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











