கேரளாவில் எந்திரனுக்குப் பின் மங்காத்தா சாதனை!
கேரளாவில் ரஜினியின் எந்திரன் செய்த வசூல் சாதனையை இதுவரை ஒரு ஒரிஜினல் மலையாளப்படம் கூட செய்ததில்லை.
நேரடி தமிழ்ப் படமாக கேரளத்தில் வெளியான எந்திரன் 9 வாரங்களில் 9 கோடியை குவித்தது. மாநிலத்தின் பல இடங்களில் நூறாவது நாளைக் கொண்டாடிய எந்திரன், மொத்தமாக ரூ 14 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தை செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் (குசேலன் தயாரிப்பாளர்) வெளியிட்டு அசாதாரண லாபம் கண்டார்.
அதன் பிறகு வேறு எந்தத் தமிழ்ப் படமும் எந்திரனில் 10 சதவீதத்தைக் கூட கேரளாவில் எட்டிப்பிடிக்கவில்லை, வெற்றிப்படம் என அறிவிக்கப்பட்ட கோ உள்பட!
ஆனால் கேரளாவில் பெரிதாக ரசிகர்கள் இல்லாதவர் எனப்பட்ட அஜீத்தின் மங்காத்தா வசூலில் கலக்க ஆரம்பித்துள்ளது.
கேரளாவில் திரையிட்ட முதல் ஒரு வாரத்தில் இந்தப் படம் 1 கோடி வசூலைத் தொட்டுவிட்டதாக கேரள விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
எந்திரனுக்குப் பிறகு, கேரளத்தில் ஒரு படத்தின் வசூல் கோடியைத் தொட்டிருப்பது இதுவே முதல்முறையாம்.
ஆந்திராவிலும் மங்காத்தா நல்ல வசூலைக்குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் முதலிடம் பிடித்துள்ளது. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் இந்த அளவு ஓடுகிறதென்றால் அது மங்காத்தாதான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











