Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோடிகளை கேட்கும் ஹீரோக்கள் - மனோரமா பாய்ச்சல்

சென்னையில் நாள் நட்சத்திரம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் மனோரமா கலந்து கொண்டார். முதல் கேசட்டை அவர் வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மனோரமா படு சூடாகப் பேசினார். அவர் பேசுகையில், கோடி கோடியாக வாரி இறைத்து படங்கள் எடுக்கும் இந்நாளில் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால் ஹீரோக்கள் ரூ.7 கோடி, 8 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை எப்படி கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
இதனால்தான் புதுமுகங்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிறேன். பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் சிறுபட்ஜெட் படங்கள் வரும்.
ஒருமுறை சரோஜாதேவி என்னிடம் பேசும்போது, சினிமாவில் கோடி கோடியாய் சம்பளம் கேட்கிறாங்க. கேட்கவே பயமா இருக்கே என்றார்.
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் கடைசியாக வாங்கிய அதிகபட்ச சம்பளம் ரூ.11 லட்சம்தான். அண்ணன் சிவாஜி ரூ.6 லட்சம் தான் வாங்கினார்.
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இப்படி நான் கூறுவதற்காக என்னை யாரும் மிரட்ட முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றார் மனோரமா.
மனோரமாவின் பேச்சு விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.