பூஜா-நரேன் 'தம்பிக்கோட்டை'!

தமிழில் அவருக்கு புதிய படங்களே இல்லாத நிலை. மலையாளத்திலோ, எந்தப் படமும் ஓடவில்லை. அவர் கடைசியாக நடித்த ராபின்ஹூட் படு சொதப்பலாகிவிட்டது.
இப்போது அவருக்கு பெரிதும் நம்பிக்கையளிக்கும் படம் புதிதாய் ஒப்பந்தமாகியுள்ள தம்பிக்கோட்டை.
படத்தில் நரேனுக்கு ஜோடி பூனம் பஜ்வா. மீனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது. பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் இந்தப் படத்தில்.
இவர்களைத் தவிர பெரிய நட்சத்திரப் பட்டாளமே தம்பிக்கோட்டையில் உண்டு. சங்கீதா, கௌசல்யா, ஆர்த்தி, சந்தானம, எம்எஸ் பாஸ்கர், கஞ்சா கருப்பு.. என நீள்கிறது பட்டியல்.
இமான் இசையமைக்கிறார், கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர் தேவர் பிலிம்ஸ் பாலசுந்தரத்தின் மருமகன் ஆர் கே சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications