பாண்டிராஜின் மெரினா... ஓவியா ஹீரோயின்!
பசங்க, வம்சம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் புதிதாக இயக்கும் படம் 'மெரினா'.
மெரினா கடற்கரையை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விளிம்பு நிலை சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறாராம் பாண்டிராஜ்.
சிவ கார்த்திகேயன் என்பவர் ஹீரோவாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். களவாணி படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக ஜொலித்து, கமலின் 'மன்மத அம்பால்' படுகாயமடைந்து காணாமல் போன ஓவியாவை இந்தப் படத்தின் நாயகியாக்கியுள்ளார் பாண்டிராஜ்.
பாண்டிராஜின் ராசியான நடிகர்கள் எனப்படும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் இதிலும் உண்டு.
பசங்க, வம்சம் படங்களின் ஸ்டில் கேமராமேனாகப் பணியாற்றிய விஜய், இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளராக கிருஷை அறிமுகப்படுத்துகிறார் பாண்டிராஜ்.
விரைவில் மெரினா படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஞ்ச நாளாக மெரினாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை. இந்தப் படத்துக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி!


Click it and Unblock the Notifications











