சன் பிக்சர்ஸ் படத்தில் லாரன்ஸுக்கு இரட்டை வேடம்!

படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து லாரன்ஸை வைத்து ஆரவாரம் எனும் படத்தைத் தயாரிக்கிறது.
பிரபல தயாரிப்பாளர் காஜா மொய்தீன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை பேரரசுவிடம் உதவி இயக்குனராக இருந்த விஜயவாணன் என்பவர் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
காமெடி, ஆக்ஷன் கலந்த இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதன் அலுவலக பூஜை சென்னையில் நேற்று நடந்தது.
இதில், சன்பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், காஜா மொய்தீன், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர் பேரரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











