கமல் படத்தில் ரஹ்மான்-ஜப்பானிய இசை கலைஞர் சங்கமம்!

கமல்ஹாசன், அசின் நடிக்கும் புதிய படம் 19 ஸ்டெப்ஸ். கமல் தனது உன்னைப் போல் ஒருவன் படத்தை 50 நாட்களுக்குள் முடித்துவிடத் திட்டமிட்டிருப்பதால், அதன்பிறகு இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.
ஹீரோ கமல் என்றாலும் இதில் அசினுக்கு ஜோடியாக ஜப்பானிய நடிகர் தடானோபோ அசானோ நடிக்கிறார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பான் என பன்மொழிப் படமாக உருவாகிவரும் 19 ஸ்டெப்ஸ்-ன் இசையமைப்பாளர் ஆஸ்கர் விருது பெற்ற நம்ம ஏஆர் ரஹ்மான்தான்.
இதில் வரும் ஜப்பானிய கலாசார இசைக்காக, அந்நாட்டு சினிமா இசையமைப்பாளர் ஜொய் சய்ஷி இசையமைத்தால் நன்றாக இருக்கும் என ரஹ்மானே விருப்பம் தெரிவித்துள்ளார். தனது விருப்பத்தை இயக்குனர் பரத்பாலாவிடம் ரஹ்மான் சொல்ல, அதை அவரும் ஏற்றுக்கொண்டார்.
உடனே டோக்கியோவுக்கு ப்ளைட் பிடித்த பரத்பாலா, ரஹ்மான் இருவரும் ஜொய்யை சந்தித்தனராம். விஷயம் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஜொய், 19 ஸ்டெப்ஸுக்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
ரூ. 50 கோடியில் தயாராகும் இப்படம் கேரளாவின் களறி கலையை மையமாகக் கொண்டு தயாராகிறது.


Click it and Unblock the Notifications











