ஆபாசமாக நடித்தால் ஆஸிட் அடிப்போம்! - ரகசியாவுக்கு மிரட்டல்

தமிழின் முன்னணி கவர்ச்சி நடிகை ரகஸியா. ரகசியம் ஏதும் வைக்காத அளவுக்கு வெளிப்படையாக கவர்ச்சி காட்டி படங்களில் இவர் போடும் நடனம் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்'ஸில் படுபிரபலமானது.
இவர் தற்போது பிகினி இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து விளம்பரத்தில் ரகஸியா தோன்றும் ஒரு காட்சி புனேயில் படமானது.
அதில் நீச்சல் உடையில் வரும் ரகஸியா, அந்த பிகினி உடையை விளம்பரம் செய்வது போல எடுத்தார்கள்.
அப்போது மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் படப்பிடிப்பு தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து, படக்குழுவினரை முற்றுகையிட்டு, 'ஆபாச காட்சிகளை படமாக்கக்கூடாது' என்று எதிர்த்தனர்.
பின்னர் போலீசார் வந்து அவர்களைச் சமாதானப்படுத்தி கலைத்தனர். இனி இதுபோன்ற காட்சிகள் படமாக்கப்படக் கூடாது என்று எச்சரித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் அன்ற படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரகஸியாவின் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை மகாராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்தவர் எனவும், பிகினி இந்தியா நிறுவன மாடல் ஒப்பந்தத்திலிருந்து ரகஸியா விலகிவிட வேண்டும் என்றும், கவர்ச்சியாக தொடர்ந்து நடித்தால் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஓஷிவாரா போலீசில் நடிகை ரகஸியா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











