twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபு தேவா வழக்கு... வக்கீல்களுடன் ஆலோசிக்கும் மனைவி ரம்லத்!

    By Chakra
    |

    Ramlath
    சென்னை: நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா அறிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரம்லத், பிரபு தேவா மீது வழக்குத் தொடர முடிவு செய்து வக்கீல்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

    1996-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறித்தான் ரம்லத்தை காதல் திருமணம் செய்தார் பிரபு தேவா. ஆனால் தனது திருமணத்தை சில ஆண்டுகள் வரை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்த பிறகுதான் திருமணத்தை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

    பிரபுதேவாவுக்காகவே முஸ்லிம் பெண்ணாந ரம்லத் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார். இவர்களின் மூத்த மகன் உடல் நலக் குறைவால் இறந்து போனது இருவரையுமே கடுமையாக பாதித்தது.

    விஜய் நடித்த வில்லு படம், அதைத் தயாரித்த ஐங்கரனுக்கு மட்டுமல்ல, பிரபு தேவா - ரமலத் தாம்பத்ய வாழ்க்கைக்கும் பெரும் சோதனையாக அமைந்தது.

    இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, நிஜத்தில் பிரபுதேவாவை தனது ஹீரோவாக்கிக் கொண்டார்.

    ஒரு கட்டத்தில் நயன்தாராவை காதலிப்பதை ரம்லத்திடம் சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டார். ரம்லத் சம்மதிக்கவில்லை. என் கணவரை விட்டு நயன்தாரா விலக வேண்டும். இல்லையேல் நயனை பார்த்த இடத்திலெல்லாம் அடிப்பேன் என எச்சரித்தார். அதனை இருவருமே பொருட்டாக கருதவில்லை. காதலை தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் நயன்தாராவை திருமணம் செய்யும் முடிவை பிரபுதேவா தற்போது பகிரங்கமாக அறிவித்தது கணவன் மனைவி இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

    மனைவி குழந்தைகளுடன் வசிக்கும் பிரபு தேவா, "நயன்தாரா எனக்கு விசேஷமானவர் அற்புதமான மனித பிறவி பாலைவனத்தில் சோலை வனமாக தெரிகிறார். எனக்கு கஷ்ட காலத்தில் உறுதுணையாக இருந்தார். காதல் நிபந்தனைகள் இல்லாதது என்பதை அவர்தான் புரிய வைத்தார். நயன்தாராவை சார்ந்த எல்லாவற்றையுமே நான் விரும்புகிறேன்...," என்றெல்லாம் நயன்தாரா புராணம் பாடியுள்ளது ரமலத்தை மட்டுமல்ல, சினிமா உலகினரையும் சமூக நல அமைப்புகளையும் அதிர வைத்துள்ளது.

    பெண்ணுரிமை அமைப்புகள் சில ரமலத்துக்கு ஆதரவாக களம் இறங்குவதாக அறிவித்துள்ளன.

    பிரபுதேவாவின் இந்தப் பேட்டி வெளியானதிலிருந்து, அவரைத் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார் ரம்லத். ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நயன்தாராவும் போனை எடுக்க மறுக்கிறாராம்.

    வேறு வழியின்றி தனக்கு நெருக்கமானவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறார் ரம்லத். அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து வக்கீல்கள் சிலருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். திருமணத்தை தடுக்க என்ன வழி என்று அவர்களிடம் கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பிரபுதேவாவுக்கு எதிராக வழக்கு தொடர்வது பற்றியும் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    பிரபு தேவா, ரம்லத் திருமணம் ரகசியமாக நடந்தது. அதை பதிவு செய்யவில்லை. வழக்கு தொடர்ந்தால் திருமணம் நடந்ததை ஊர்ஜிதபடுத்த ஆதாரங்களையும் காட்சிகளையும் சேகரித்து வருகிறார்.

    ஒருவேளை நயன்தாரா - பிரபு தேவா திருமணம் நடப்பது உறுதியாகி, அதற்கு எதிராக ரம்லத் வழக்கு தொடரும் பட்சத்தில் நயன் - பிரபு தேவா இருவருக்குமே 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை நிச்சயம்.

    எனவே அப்படி ஒரு நிலைமை வராமல் இருக்கும் பொருட்டு, ரமலத்தை சரிகட்டி, இருவருடனும் பிரபு தேவா குடும்பம் நடத்தும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய பிரபு தேவாவின் தந்தை சுந்தரம் முயன்று வருகிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X