'அச்சமுண்டு அச்சமுண்டு'..வெளியி்ட்ட பூக்குட்டி

By Staff

Resool Launches Achamundu Achamundu audio
அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு, ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரெசூல் பூக்குட்டி கேசட்டை ரிலீஸ் செய்தார்.

அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. இப்படத்தின் ஆடியோ கேசட் வெளியிட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவில் தனது பிசியான வேலைகளுக்கு நடுவில் ஆஸ்கர் விருது வென்ற ரெசூல் பூக்குட்டி கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார். அந்த பாடல் கேசட்டை படத்தின் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதரி பவாதாரிணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா கூறுகையில், அருண் வைத்தியநாதன் தனது முதல் முயற்சியையே சிவப்பு சிந்தனையுடன் ஆரம்பித்துள்ளார் என்றார்.

உலக நாயகன் கமலஹாசன் உடனான தனது முதல் சந்திப்பின் அனுபவத்தையும் அதன் மூலம் நான் கற்று கொண்ட விஷயங்களையும் விழாவுக்கு வந்திருந்தவர்களுடன் ரெசூல் பூக்குட்டி பகிர்ந்து கொண்டார்.

பாடல் கேசட் வெளியிட்டு முன்னதாக படத்தின் டிரைலரும், மூன்று பாடல்களும் திரையிடப்பட்டது. விழாவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் திரண்டு வந்திருந்த போதிலும் படத்தின் நாயகன் பிரசன்னா, நாயகி சினேகா ஆகியோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்ததில் அவர்கள் விழாவுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X