ஷாருக் இனி என் நண்பரில்லை-சல்மான்

By Staff

Shahrukh Khan with Salman Khan and Katrina Kaif
ஷாருக் கான் இனிமேலும் எனக்கு நண்பராக இருக்க முடியாது என்று சல்மான் கான் கோபமாக கூறியுள்ளார்.

சர்ச்ைசகளுக்குப் பெயர் போனவர் சல்மான். முன்பு ஐஸ்வர்யா ராயுடன் காதல் கொண்டிருந்தபோது, அவர் வீட்டுக்கு நள்ளிரவில் போய் கலாட்டா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் காதலி காத்ரீனா கைஃபின் பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்த ஷாருக் கானுடன் மோதலில் இறங்கினார்.

இருவரும் செய்து வரும் டிவி கேம் ஷோ குறித்து தகராறு ஆரம்பித்தது. சல்மான் கான் தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். ஷாருக் கான் கியா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஸ் ஹைன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.

பார்ட்டியின்போது பான்ச்வி பாஸ் சரியாக போகாதது குறித்து சல்மான் கிண்டலடிக்க, பதிலுக்கு உனது காதல் வாழ்க்கை மட்டும் சிறப்பாக இருந்ததா என்று ஷாருக் சீண்ட இருவருக்கும் அடிதடியாகி விட்டது.

கோபமடைந்த ஷாருக் கான் தனது மனைவி கெளரி மற்றும் நண்பர் கரண் ஜோஹருடன் இடத்தைக் காலி செய்தார்.

இரு கான்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பார்ட்டிக்கு வந்திருந்த ஆமிர்கான் முயன்றார். ஆனால் அது கை கொடுக்கவில்லை. சல்மானைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அத்தோடு நில்லாமல் அவரது வீட்டுக்குப் போய் வீட்டுக்கு வெளியே நின்று கத்தி கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டார்.

சல்மான் கானின் செயலால் பாலிவுட் பரபரப்பானது. இந்த நிலையில், ஷாருக் கான் இனிமேலும் எனது நண்பராக இருக்க முடியாது என்று சல்மான் கான் அறிவித்துள்ளார்.

தான் புதிதாக நடிக்கவுள்ள வீர் படத்தின் ஷூட்டிங்குக்கு வந்த சல்மான் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இருவரும் மாறுபட்டவர்கள். மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள். முன்பு நான் அவரை மிகவும் நேசித்தேன்.

ஆனால் இப்போது மாறி விட்டது. இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது கூட கிடையாது. இனிமேலும் நாங்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்றார் சல்மான்.

சல்மானின் இந்த ஸ்டேட்மென்ட் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X