135 மணி நேர 'பிளேடு'!

By Staff

Dheena
பிக் எப்எம்மில் ஜாக்கியாக இருப்பவர் தினா... சாதா தினா என்றால் யாருக்கும் தெரியாது... பிளேடு தினா என்றால்தான் சட்டென்று தெரியும்...

முதலில் சூரியன் எப்எம்மில் இருந்தவர், இப்போது 'பிக் 92.7'கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் 135 மணி நேரம் தொடர்ந்து பேசி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியை சில தினங்களுக்கு முன் ஆரம்பித்தார்.

எடுத்த முயற்சியில் முழுமையாக வெற்றியும் அடைந்துள்ளார் தினா, இப்போது.

இதற்கு முன் 108 மணிநேரம் தொடர்ந்தி பேசியதுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. இப்போது அதை முறியடித்துவிட்டார் தினா.

135 மணி நேரம் தொடர்ச்சியாக பேசுவது கின்னஸ் ஆர்வத்திலிருக்கும் தினாவுக்கு வேண்டுமானால் சாதனையாக இருக்கலாம். ஆனால் அதனைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிஜமாகவே பிளேடாகிவிடாதா?

அதனால் நேயர்களின் நேரத்தை இனிமையாக்க சொனாட்டான் உதவியை நாடினார் தினா. உடனே நிகழ்ச்சிக்குத் தேவையான மொத்த இசையையும் சொனாட்டான் நிறுவனம் சார்பில் அதன் இந்தியப் பிரதிநிதியான லேகா ரத்னகுமார் வழங்கியுள்ளார்.

ஒருபக்கம் தினா 'பிளேடு' போட்டுக் கொண்டிருக்க, பின்னணியில் இனிய இசை ஒலிக்க, 135 மணி நேரம் ஓடிய வேகம் தெரியவில்லை. தினாவும் கின்னஸ் சாதனையாளராகிவிட்டார்.

இந்த விவரங்களைக் கேள்விப்பட்ட சொனாட்டான் தலைவர் ஜெரால்டு மர்ஹோல்ஸ் உடனடியாக அதனை தங்கள் தளத்திலும் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார். லேகா ரத்னகுமாரும் தினாவை நேரடியாக சந்தித்து பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X