Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான். பார்வையாளர்களை சங்கடப்படுத்தாத அளவுக்கு அதை என்னால் செய்ய முடியும், என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
கமலுக்கு இப்போது வயது 56. இதனை சுட்டிக் காட்டி, இந்த வயதில் ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல், "வயசு ஒரு விஷயமில்லை. என்னால் அந்த வேடத்தை சிறப்பாக செய்ய முடியுமா... மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்ய முடியுமா என்பதுதான் முக்கியம். இந்த வயசுல நான் காலேஜுக்குப் போற மாதிரி காட்டறதுதான் சங்கடமா இருக்கும். ஆனால் கல்லூரி பருவம் முடிந்த இளைஞனாக நடிப்பதில் கஷ்டமில்லை..." என்றார்.
வணிகமயம் என்ற பெயரில் சினிமாவை கெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "அப்படி ஒரேயடியா சொல்லிட்டா எப்படி... பத்மா சுப்பிரமணியம் வந்த பிறகுதான் பரதநாட்டியம் உலகெல்லாம் போச்சு. அதுக்காக பரதநாட்டியத்தை வணிகமயமாக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாதே...
எல்லா கலைகளிலும் புதுமை இருந்துகிட்டே இருக்கணும். இல்லன்னா அந்த கலை தேங்கி நின்னுடும். அதை யார் வேணும்னாலும் செய்யலாம். சின்ன நடிகர், பெரிய நடிகர் யார் வேணும்னாலும்... அவரவருக்கு தோன்றும் புதுமைகளை, நல்ல விஷயங்களை செய்துகிட்டே இருங்க. மக்கள் வேணுங்கறதை எடுத்துப்பாங்க. அதைவிட்டுட்டு சும்மா விமர்சனம் என்ற பெயரில் குத்திக்கிட்டு இருக்க வேணாம்...", என்றார் கலைஞானி!