சன் வசம் யோகி!

அமீர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ள படம் யோகி. இந்தப் படத்தை வாங்கி ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டியது சன். ஆனால் ஒரு நிபந்தனை விதித்திருந்தார் அமீர். அமீரின் யோகி என்றுதான் அனைத்து டிசைன்களிலும் வரவேண்டும் என்பதே அது.
அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த சன் பிக்சர்ஸ் சக்ஸேனா, தனது பேச்சின்போதே, இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்தார்.
உடனே, எழுந்த அமீர், 'அதுக்கென்ன, தாராளமா உங்களுக்குத் தர சம்மதம்" என்று கூறிவிட்டார்.
டீல் ஓகேயாகிவிட்டதா என்பதை அமீர்தான் அறிவிக்கவேண்டும்!
ஈரம் படத்தை இதே முறையில் கேட்டுப் பார்த்தார் சக்ஸேனா. ஆனால் ஷங்கர் மறுமொழி ஏதும் சொல்லாமல் அமைதி காத்து, தாமே வெளியிட்டுவிட்டார். படம் செம பிக்கப்!
Comments


Click it and Unblock the Notifications