கரீனா படத்தில் 'ராம்போ'!

பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா, கம்பக்த் இஷ்க் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடி போடுகிறார் கரீனா கபூர்.
இப்படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். சில்வஸ்டர் ஸ்டாலோனாகவே தோன்றுகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார், ஹாலிவுட் ஸ்டண்ட் மேன் வேடத்தில் நடிக்கிறார். ஸ்டாலோன் படத்தில் அக்ஷய் தோன்றுவது போன்ற காட்சியில்தான் ஸ்டாலோன் நடிக்கவுள்ளார்.
அவரை இப்படத்தில் தோன்ற வைப்பதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பேசினாராம் நாடியத்வாலா. இப்போதுதான் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளாராம் ஸ்டாலோன்.
இந்தியப் படம் ஒன்றில் ஸ்டாலோன் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை. இன்னொரு விசேஷமும் இப்படத்தில் உள்ளது. யுனிவர்சல் ஸ்டுடியோவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ள முதல் இந்தியப் படப்பிடிப்பு இது என்பதே அந்தப் பெருமை.
ரூ. 90 கோடி செலவில் இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். பாலிவுட்டில் இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு உருவாக்கப்படும்
முதல் படம் இதுதானாம்.
படத்திற்கு சண்டைப் பயிற்சி 'ராம்போ' ராஜ்குமாரா??


Click it and Unblock the Notifications











