twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆங்கிலத்தில் பேசுவது பெருமையல்ல-சிவக்குமார்

    By Staff
    |

    Sivakumar
    கல்வி மட்டுமே மனிதனை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும். தமிழை விட எளிமையான மொழி எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டியதில்லை என நடிகர் சிவக்குமார் கூறினார்.

    திருப்பூரையடுத்த செங்கப்பள்ளியில் ஸ்ரீ குமரன் பள்ளி திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பள்ளிக் கட்டத்தை திறந்து வைத்தார்.

    அப்போது சிவகுமார் பேசுகையில்,

    கல்வி மட்டுமே மனிதனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆசிரியர் கற்றுக் கொடுத்த ஒழுக்கமே என்னை வாழ்வில் உயர்வடையச் செய்துள்ளது.

    அத்தகைய மனோதிடத்தை கற்றுக் கொடுத்தது ஆசிரியர்கள் தான். ஒவ்வொரு ஆசிரியரையும் நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.

    அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே மாணவர்களை உயர்த்திவிடாது. பெற்றோர் செய்யும் தியாகங்களை குழந்தைகள் புரிந்து நடக்க வேண்டும். அந்த தியாகமே குழந்தைகளை வாழ்வில் உயர்வடையச் செய்கிறது.

    ஒவ்வொரு குழந்தைகளிடமும் பல வித தனித்திறமைகள் உள்ளன. அவர்களிடம் உள்ள அற்புதமான விஷயங்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.

    பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்வோர் தாய்நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது.

    தமிழை விட எளிமையான மொழி எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டியதில்லை.

    மொழி, கலாசாரம், பண்பாடு நிறைந்த இம்மண்ணில் வாழ விரும்ப வேண்டும். தேவைக்கு ஏற்ற பணத்தை வைத்துக்கொண்டு மற்றதை சமுதாயத்துக்கு செலவிட வேண்டும். இல்லையேல் அப்பணமே வாழ்க்கையே அழித்துவிடும் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X