மெளன மொழியில் 'தாரே ஜமீன் பர்'

ஆமிர்கான் முதன் முதலில் இயக்கி நடித்த படம் தாரே ஜமீன் பர். பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தைப் பார்த்து பாஜக தலைவர் அத்வானி கண்ணீரை அடக்க முடியாமல் அழுது விட்டாராம்.
இப்போது இந்தப் படம் வாய் பேச முடியாதோர், காது கேளாதோருக்காக சைன் லாங்குவேஜில் டப் செய்யப்பட்டுள்ளது.
இதை இந்தூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான அனந்த் மூக் பதிர் கேந்திரா செய்துள்ளது. அதன் இயக்குநர் கியானேந்திரா புரோஹித் இதுகுறித்துக் கூறுகையில், படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து வசனங்களும், பாடல்களும் சைன் லாங்குவேஜில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வாய் பேச முடியாத, காது கேளாதவர்கள் படத்தை ரசித்துப் பார்க்க முடியும்.
இப்படத்தை கல்வித் திட்டத்திலும் சேர்க்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். காரணம், இப்படத்தில் மிக மிக நல்ல செய்தி உள்ளது என்றார் அவர்.
15 நாட்களில் சைன் லாங்குவேஜில் டப் செய்யும் பணிகளை முடித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











