ஐஸ்சுக்கு எதிராக வருமான வரித்துறை!

By Staff

Aishwarya Rai
உலக அழகிப் பட்டம் வென்றதற்குப் பரிசாகப் பெற்ற ரூ.30 லட்சம் ரொக்கம் மற்றும் இதர பரிசுகளுக்கு முறையாக வரி கட்டவில்லை என மும்பை கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது வருமான வரித்துறை.

1996ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றார் ஐஸ்வர்யா ராய். இதற்காக ரூ.30 லட்சம் அவருக்கு ரொக்கப் பரிசு கிடைத்தது.

மேலும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பெரும் பரிசுப் பொருள்களோடு திரும்பினார். தான் பரிசாகப் பெற்ற தொகைக்கு செலுத்த வேண்டிய வருமான வரிக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்று கூறி சலுகை பெற்ற ஐஸ்வர்யா ராய், 1996-97-ம் ஆண்டில் தான் வரி செலுத்தக் கூடிய வருவாயாக சம்பாதித்தது ரூ.2.17 லட்சம் மட்டுமே என்று கூறியிருந்தார்!

அப்போதைய சூழலில் ஐஸ்வர்யா ராயிடம் மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் விட்டுவிட்டனர்.

ஆனால், 2003-ல் வருமானவரித் துறையினர் இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டினர்.

1996-97-ல் ஐஸ்வர்யா ராய் 186 நாட்கள் வெளிநாட்டில் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் வெளிநாட்டு இந்தியருக்கான சலுகையை அவர் பெற முடியும்.

இந்த உண்மையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மீண்டும் களமிறங்கிய வருமான வரித்துறை, ரூ.26 லட்ச ரூபாய்க்கு ஐஸ்வர்யா வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தனர். இதை எதிர்த்து ஐஸ்வர்யா, வருமான வரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

காலம் கடந்து சலுகையைப் பறிப்பது சரியல்ல என்று கூறி வருமான வரித் துறையின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை நேற்று அப்பீல் செய்துள்ளது. வெளிநாட்டு இந்தியர் என்று கூறி ஐஸ்வர்யா ராய் வரி சலுகை பெற்றது சரியல்ல. இதை ரத்து செய்ய வேண்டும் என வழக்கில் தெரிவித்துள்ளது வருமான வரித்துறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X