ஆர்யா வில்லனாக நடித்த வருடு வசூலில் சாதனை

இதனால் படத்தின் இயக்குனரான தமிழர் குணசேகரன் உட்பட பலரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
குறிப்பாக ஹீரோ அல்லு அர்ஜூன் தனது கேரியரில் இதுபோன்ற ஓபனிங்கை எந்த படத்துக்கும் பார்க்கவில்லை என பார்ப்பவர்களிடம் எல்லாம் சிலாகித்துக் கூறுகிறாராம்.
படத்தில் நம்ம ஊர் சுஹாசினி, நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் வெளிவந்த முதல் நாளிலேயே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியுள்ளது.
படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.7.28 கோடியை தாண்டியுள்ளது.
தெலுங்கு பட உலகில் இந்த வசூலை எட்டிய மிகச் சில படங்களில் 'வருடு'வும் ஒன்று.
படத்தில் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். ஆர்யாவின் வில்லன் நடிப்பை ஆந்திர ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். வில்லனாக ஆர்யா நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆர்யாவும், அல்லு அர்ஜூனும் இதன் மூலம் ராசியான கூட்டணியாகி விடுவார்கள் என்று தெலுங்கு படவுலகில் பேச்சு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











