தெலுங்கின் 'தமிழ்' மோகம்!

By Staff

Kovai Sarala
இந்தி சினிமா நடிகைகள் மீது இங்குள்ள தமிழ் ரசிகர்களுக்கு மோகமோ அப்படி தமிழ் நடிகைகள் மீது தெலுங்கு ரசிகர்களுக்கு மோகம். அதனால்தான் அங்கு எல்லா தமிழ் நடிகைகளுமே 'க்ளிக்காகி' விடுகிறார்கள் என்கிறார் நடிகை கோவை சரளா.

கின்னஸ் சாதனைக்காக நடிகரும் இயக்குநருமான பாபு கணேஷ், இயக்கம், இசை, எடிட்டிங், மக்கள் தொடர்பு, சண்டைக்காட்சி, நடனம், கதை, வசனம், பாடல், ஒளிப்பதிவு, தயாரிப்பு, பின்னணி பாடுதல் உள்ளிட்ட 14 பொறுப்புகளை ஏற்றுள்ள படம் நடிகை. படம் முழுவதுமாக முடிந்து இப்போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேஜாஸ்ரீ நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமாக முடிவது ஏன் என்பதை அலசுகிறதாம்.

இதுபற்றி பாபு கணேஷ் கூறுகையில்,

பெரும் வெளிச்சத்தில் ஓகோவென திகழும் நடிகைகள் வாழ்க்கை மட்டும் ஏன் இருட்டில் முடிகிறது என்ற கேள்விக்கான விடைதான் இந்தப் படம்.

நடிகைகள் சில்க் ஸ்மிதா, மோனல் போன்றவர்களின் தற்கொலையைப் பார்த்து, இனி இப்படியொரு சேகம் நடக்கவே கூடாது என்ற முடிவில் நான் உருவாக்கியுள்ள படம் இது. ஆரம்பத்தில் எல்லா பொறுப்புகளையும் நானே ஏற்றுச் செய்ய, மற்ற சங்கங்களைச் சேர்ந்த கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நோக்கத்தை விளக்கினேன். இப்போது புரிந்து கொண்டார்கள்.

நடிகை படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. அதன் ஒரு பிரதி, கின்னஸ் சாதனைப் புத்தக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் பாபு கணேஷ்.

விழாவில் பங்கேற்ற நடிகை கோவை சரளா பேசியதாவது:

இங்கு எப்படி இந்தி நடிகைகள் மீது தனி மோகம் கொண்டு ரசிகர்கள் படம் பார்க்கிறார்களோ, அதே போலத்தான் தெலுங்கு ரசிகர்களுக்கு தமிழ் நடிகைகள் மீது தனி மோகம். தெலுங்கில் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டேன் அங்கு. அதனால்தான் தமிழில் நடிக்கவில்லை. இன்னொன்று தெலுங்கில் உள்ள காமெடி நடிகர்களைப் போல, இங்குள்ள காமெடி நடிகர்கள் ஒற்றுமையாக இல்லை என்றார் கோவை சரளா.

வைகைப் புயல்கள், சின்னக் கலைவாணர்கள் காதில் விழுகிறதா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X