ஹாலிவுட் போகும் துபாய் இந்தியர்

By Staff

UAE
துபாயில் வசித்து வரும் இந்தியரான சோஹன் ராய், ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். துபாயிலிருந்தபடி தயாரிக்கப்படும் முதல் ஹாலிவுட் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

துபாயில் கடந்த 16 வருடங்களாக வசித்து வருகிறார் சோஹன் ராய். தற்போது டேம் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரித்து, இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் துபாயிலேயே நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சோஹன் ராய் கூறுகையில், 2009ம் ஆண்டு இப்படம் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் திரையிடப்படும். துபாயிலும், ஒருகப்பலிலும் படப்பிடிப்பு நடைபெறும். துபாயைச் ேசர்ந்த மெரைன் பிஸ் டிவி இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இந்த டிவியை கடந்த ஆண்டுதான் நான் தொடங்கினேன். உலகின் முதலாவது கடல்சார் தொலைக்காட்சி நிறுவனம் இது. 163 நாடுகளில் இதன் ஒளிபரப்பு உள்ளது என்றார்.

சோஹன் இயக்கும் முதல் படமே இதுதான். படத்தில் மொத்தம் 9 முக்கிய கேரக்டர்கள் இடம்பெறவுள்ளனவாம். இதற்கான நடிகர், நடிகையரை பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலிருந்து தேர்வு செய்யப் போகிறாராம் ராய்.

படத்தில் ஐஸ்வர்யா இருக்கிறாரா ராய்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X