பக்கா மசாலா படமான வாடா நாளை ரிலீஸ்

முழுக்க முழுக்க மசாலா கலந்த அதிரடிப் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதை கிட்டத்தட்ட தீர்மானமாகவே வைத்துள்ளார் சுந்தர்.சி. தொடர்ந்து அதிரடிப் படங்களாகவே நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடித்துள்ள படமான வாடா நாளை திரைக்கு வருகிறது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஷெரில் பின்டோ நாயகியாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். ரசிகையாக இதில் வருகிறாராம் ஷெரில்.
குஷ்பு ஒரு பாடலுக்கு தலை காட்டியுள்ளார். பக்கா மசாலாப் படமாக வாடா வந்துள்ளதாம்.
கமர்ஷியல் படம் என்பதால்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்கிறார் சுந்தர். சி. அந்த அளவுக்கு பக்கா மசாலாப் பக்கோடாவாக இந்த வாடா அமைந்துள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications