சிறு வயதில் டீக்கடையில் வேலை பார்த்த ஓம் பூரி

இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகுக்குக் கிடைத்த நல்ல நடிகர்களில் ஒருவர் ஓம்பூரி. ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
சிறு வயதில் மிகக் கொடுமையான வறுவையில் வாடியுள்ளார் ஓம்பூரி. அம்பாலாவில் பிறந்தவர் ஓம் பூரி. அவரது ஆரம்பகாலம் மிகக் கொடுமையானது.
ஓம்பூரியின் தந்தை தனது வீட்டில் நிலவிய வறுமையை விரட்ட மிகக் கடுமையாக போராடினாராம். ஓம்பூரியின் தந்தையான தேக் சந்த், ஒரு வேலையிலும் நிரந்தரமாக நீடித்ததில்லை. காரணம் அவரது குணம் அப்படி.
அடிக்கடி முனுக் முனுக் என்று கோபம் வந்ததால் அவரால் ஒரு வேலையில் அதிகபட்சம் 6 மாதம் மட்டுமே நீடிக்க முடிந்ததாம்.
இதனால் சிறுவனாக இருந்தபோது ஓம்பூரி டீக்கடையில் வேலை பார்த்து சம்பாதித்தாராம்.
ஓம்பூரியின் மனைவி நந்திதா பூரி எழுதியுள்ள ஓம்பூரியின் வாழ்க்கை வரலாற்று நூலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications