ஹாலிவுட்டில் 'யாவரும் நலம்'!

இந்தியப் படம் ஒன்றை ஹாலிவுட்டில் ரீமேக் செய்வது இதுவே முதல் முறையாம்.
மாதவன், நீத்து சந்திரா உள்ளிட்டோர் நடித்து விக்ரம் குமார் இயக்கிய படம்தான் யாவரும் நலம். இந்தியில் 13பி என்ற பெயரில் இப்படம் வெளியானது.
வித்தியாசமான கதையமைப்பு கொண்ட இப்படம் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.
ராம்போ, அவுட்லேண்டர் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் என்ற நிறுவனம் இந்தப் படத்தை பெர்லின் திரைப்பட விழாவில் பார்த்து அசந்து விட்டதாம்.
இதையடுத்து இப்படத்தின் கதையை வாங்கியுள்ள அந்த நிறுவனத்தால் ஹாலிவுட்டில் அதைத் தயாரிக்கவுள்ளனர்.
இந்தியப் படம் ஒன்று ஹாலிவுட்டில் ரீமேக் ஆவது இதுவே முதல் முறை என்று பெருமையுடன் கூறுகிறார் விக்ரம் குமார்.
வழக்கமாக நம்மவர்கள்தான் ஹாலிவுட் படங்களை இங்கு தமிழில் கொடுப்பார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக தமிழ், இந்தியில் வெளியான ஒரு படம் ஆங்கிலத்திற்குப் போவது பெருமையான விஷயம்தான்.


Click it and Unblock the Notifications











