சூர்யா - ஜோதிகாவின் மாஸ்டர் பீஸ்... சில்லுனு ஒரு காதல் ரிலீஸ் ஆகி 15 வருஷம் ஆச்சு!

சென்னை: சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்தப் படம் குறித்த சுவாரசிய ரீவைண்ட்..

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி. நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூர்யா.

வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஜோதிகா. அதன்பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இணைந்து நடித்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோதிகா

முன்னணி நடிகர்களுடன் ஜோதிகா

அதனை தொடர்ந்து நடிகை ஜோதிகா முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார். அஜித், விஜய், ரஜினி, கமல், சிம்பு, மாதவன், பிரசாந்த், விக்ரம், அர்ஜூன், பிரித்திவி ராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ஜோதிகா.

சூர்யாவுடன் 7 படங்கள்

சூர்யாவுடன் 7 படங்கள்

நடிகை ஜோதிகா மற்ற எந்த நடிகருடனும் இல்லாத அளவுக்கு நடிகர் சூர்யாவுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார். உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா ஜோதிகா திருமணம்

சூர்யா ஜோதிகா திருமணம்

சூர்யாவுடன் படங்களில் சேர்ந்து நடித்த போது அவருடன் ஜோதிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் காத்திருந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல்

இந்நிலையில் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு முன்பாக அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரொமான்டிக் படம் சில்லுனு ஒரு காதல் படம். காதல் சொட்டும் கணவன் மனைவியாக, பார்க்கும் தம்பதிகள் பொறாமைப்படும் அளவுக்கு நடித்திருப்பார்கள் சூர்யாவும் ஜோதிகாவும்.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

என் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யா ஜோதிகா தவிர முக்கிய கதாப்பாத்திரத்தில் பூமிகா நடித்திருந்தார். சந்தானம், தண்பாணி, வடிவேலு, சுகன்யா, தம்ப ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூர்யா ஜோதிகாவின் மகளாக ஷ்ரேயா ஷர்மா நடித்திருந்தார்.

15 ஆண்டுகள் நிறைவு

15 ஆண்டுகள் நிறைவு

இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு பிலிமிபீட்டின் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் சில்லுனு ஒரு காதல் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் வினோத். அந்தப் படத்தில் சூர்யாவின் டைரியை படித்து பார்த்து அவரது முதல் காதலை தெரிந்து கொள்ளும் ஜோதிகா, கணவர் சூர்யாவை மற்ற பெண்கள் ரசிக்கும் போது மனைவியாக ஜோதிகாவின் ரியாக்ஷன் என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பூமிகாவின் ட்ரான்ஸ்மிஷன்

இதேபோல் சூர்யா - ஜோதிகாவின் மகளாக குட்டிப் பெண்ணான ஷ்ரேயா பேசும் விதம் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றையும் அலசியுள்ளார். மேலும் சூர்யாவின் ஆபிஸ் டென்ஷன் மனைவியிடம் வெளிப்படும் தருணம், பூமிகாவின் ட்ரான்ஸ்மிஷன், படத்தின் காமெடி காட்சிகள், படத்தின் பாடல்கள், படத்தின் முதல் பாதி இரண்டாம் பாதி என அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X