For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே“… போலீஸா கமல் செம கெத்துக்காட்டிய வேட்டையாடு விளையாடு!

  |

  சென்னை : இதுவரை நாம் பார்த்திராத கமலஹாசனை கண் முன் நிறுத்திய திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

  2006ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

  மனுஷன் தூங்குவாரா இல்லையா? அடுத்த மாசம் 3 படம் ரிலீசாகுதே; இதோ அனபெல் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்!மனுஷன் தூங்குவாரா இல்லையா? அடுத்த மாசம் 3 படம் ரிலீசாகுதே; இதோ அனபெல் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்!

  இப்படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

  வேட்டையாடு விளையாடு

  வேட்டையாடு விளையாடு

  தமிழ் சினிமாவில் எத்தனையோ காவல்துறை திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன. கெளதம் மேனன் இயக்கத்தில் 2003-ல் வெளியான காக்க காக்க திரைப்படம் காவல்துறைப் படங்களிலிருந்து பல வகைகளில் மாறுபட்டிருந்தது. அந்தப் படத்தின் நாயகன் சூர்யா ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாகத் நடித்திருந்தார். படத்தின் உருவாக்கத்திலேயே அதி நவீன ஸ்டைலிஷ் தன்மை இருந்தது. இதன் தொடர்ச்சி என்று சொல்லக்கூடிய வகையில் 2006-ல் இதே நாளில் (ஆகஸ்ட் 25) வெளியான வேட்டையாடு விளையாடு ஸ்டைலிஷ் காவல் துறை த்ரில்லர் படம் என்கிற வெளியாகி என்றென்றைக்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது.

  கௌதம் மேனன் தனிமுத்திரை பதித்தார்

  கௌதம் மேனன் தனிமுத்திரை பதித்தார்

  காவல்துறை அதிகாரியின் மகள் கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்குதான் கதை. அதை நோக்கி விரியும் திருப்பங்கள்தான் திரைக்கதை. தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்து ரசித்த போலீஸ் கதைதான் என்றாலும், கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தை நமக்கு வழங்கியவிதம் இன்றளவும் பேசப்படுகிறது. ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம் எனப் பலரும் சொல்வதுண்டு. அப்படியொரு ஹாலிவுட் ஸ்டைலில் போலீஸ் திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுத்ததின் மூலம் கெளதம் வாசுதேவ் மேனன் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.

  கர்ஜித்த கமல்

  கர்ஜித்த கமல்

  படம் தொடங்கும் போதே, அப்படியே பொரி பறக்கும் என்பது போல, என் கண்ணு வேணும்னு கேட்டியாமே... இப்போ நானே வந்திருக்கேன் எடுடா பாப்போம் என்று கர்ஜித்த கமல் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இறந்துபோன தன் மனைவியின் அருகில் கண்ணீர்விட்டு கதறிய காட்சியிலும், படத்தின் க்ளைமாக்ஸில் வில்லன்களில் ஒருவரை அடித்து வீழ்த்துவதிலும் திரையில் இதுவரை நாம் பார்த்திராத கமல் காட்டி இருப்பார் இயக்குனர் கௌதம்மேனன்.

  சூப்பர் ரொமான்ஸ்

  சூப்பர் ரொமான்ஸ்

  கமல் படத்தில் ரொமான்ஸ் இல்லாமல் இருக்குமா இருந்தது, படம் வெளியாகி 15 வருடம் கடந்த பிறகும் அந்த ரொமான்ஸ் இன்றும் அழகு பேசுகிறது. கமல் மற்றும் அவரது மனைவிக்கிடையேயான ரொமான்ஸ், ஒரு ஹைக்கூ கவிதை போல் மிக சீக்கிரம் முடிந்து ஏக்கத்தை ஏற்படுத்தியது. ஜோதிகாவுடன ரொமான்ஸ் கொஞ்சம் சிக்கலான உரைநடைக் கவிதை ஆனாலும் அழகு.

  ஹிட் பாடல்கள்

  ஹிட் பாடல்கள்

  படத்தில் கமல்ஹாசனை மிஞ்சி மொத்த மதிப்பெண்ணையும் எடுத்துக்கொண்டவர் ஹாரிஸ் ஜெயராஜ். பார்த்த முதல் நாளே பாடல், கேட்ட முதல் நாளிலிருந்தே சூப்பர்ஹிட். மஞ்சள் வெயில் மாலையும் பாடலில் அப்படியே பிரம்மிக்க வைத்துவிட்டார். படத்தின் கடைசி அரைமணி நேரத்தில் அவற்றையெல்லாம் மிஞ்சி பின்னணி இசையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருந்தார் ஹாரிஸ்.

  வேட்டையாடு விளையாடு 15வருஷமாச்சு

  வேட்டையாடு விளையாடு 15வருஷமாச்சு

  இத்திரைப்படம் வெளியாகி வருஷம் 15 ஆனாலும் இன்னும் இந்த படத்தை பற்றி பேசுவதற்கும்,காட்சிகள் குறித்து பேசி உச்சுகொட்டுவதற்கும் வேட்டையாடு விளையாடு திரைப்படம் மனதில் ஏற்படுத்திய தாக்கம் தான். நல்ல ககைளுக்கும், நல்ல படைப்புகளுக்கும் என்றுமே அழிவே இல்லை. காலங்கள் கடந்தாலும் அவை நிலைத்து இருக்கும்.

  English summary
  15 years since the release of Kamal Haasan's crime thriller Vettaiyaadu Vilaiyaadu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X