பாலிவுட்டுக்கு இசையமைக்கும் யுவன்

இந்தி நடிகர் சன்னிதியோலின் படத்தில்தான் யுவன்ராஜா இசையமைக்க உள்ளார். யுவனின் சில பாடல்களை கேட்ட சன்னிதியோல் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம். தன்னுடைய அடுத்த படத்தில் யுவனின் அசத்தும் இளமை இசையை அவிழ்த்துவிட முடிவு செய்து விட்டாராம் சன்னி.
அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிசியாக இருக்கிறார் யுவன். கைவசம் உள்ள 13 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து யுவனும் பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார். தடம் பதிக்க வாழ்த்துக்கள்.
Comments


Click it and Unblock the Notifications