ஒரே நாள், 19 படங்கள்!!

By Staff

Rajathi Raja movie still
கோடம்பாக்கத்துக்கும் சென்டிமெண்டுக்கும் உள்ள தொடர்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆடி மாதம் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், இந்த மாதத்தில் சிறப்பான நாள் என்று சொல்லப்பட்ட நேற்று திரும்பிபக்கமெல்லாம் புதுப்பட பூஜைகள் மயம்.

சென்டிமெண்டாக ஆடி மாதத்தில் புதுப்பட பூஜைகளை கோடம்பாக்கத்தில் யாரும் செய்வதில்லை. வெகு அரிதாக ஒன்றிரண்டு தயாரிப்பாளர்கள் மட்டும் நடத்துவார்கள். மற்றவர்கள் ஆடிக்கு முன் அல்லது ஆடி கழிந்த பிறகே பூஜைகளை வைத்துக் கொள்வார்கள்.

நேற்று மட்டும் 19 புதுப் படங்களுக்கு பூஜை போடப்பட்டது. இதனால் ஸ்டுடியோக்களில் திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா களை.

6 கதாநாயகிகளுடன் லாரன்ஸ் நடிக்க, ஷக்தி சிதம்பரம் இயக்கும் புதுப்படம் ராஜாதி ராஜாவின் பூஜையும் படப்பிடிப்பும் ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் நடந்தது.

ரம்பா மீண்டும் நடிக்கும் விடியும் வரை காத்திரு பூஜையும் அதே பிள்ளையார் கோயிலில் சில நிமிட இடைவெளியில் நடந்து முடிந்தது. புதிய இயக்குநர் வியாஸ் இயக்கும் இப்படத்தின் நாயகன் பிரகாஷ் ராஜ். முக்கிய வேடத்தில் முமைத் கான் நடிக்கிறார்.

விவேக் கதாநாயகனாக நடிக்கும் மகனே மருமகனே படத்தின் பூஜையும் ஏவிஎம்மில்தான் நடந்த்து. டிபி கஜேந்திரன் இயக்கும் இப்படத்தின் நாயகி ஜோதி.

தகப்பன்சாமி படத்தைத் தயாரித்த கோபால் தயாரிக்கும் புதிய படம் உற்சாகத்தின் பூஜையும், சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய், விஜயலட்சுமி நடிக்கும் அதே நேரம் அதே இடம் படத்தின் பூஜையும் நேற்று ஏவிஎம்மில் நடந்தது.

புதுமுகங்கள் நடிக்கும் மாமல்லன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கியது.

ராஜ் டிவியும், நாசரும் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ரமணா நாயகனாக அறிமுகமாகும் குதிரை பட பூஜைம் படப்பிடிப்பும் நேற்று நடந்தது. ஆறாவது வனம் எனும் பெயரில் ஒரு படத்தின் பூஜையும் நடந்தது.

காத்தவராயன் படத்தைத் தயாரித்த ராமச்சந்திரனின் பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜையும் நேற்றுதான் நடந்தது. ஆக ஒரே நாளில் ஒன்பது படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு அமர்க்களமாகத் துவங்கியுள்ளது.

இந்தப் படங்களைத் தவிர மேலும் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பெயர் சூட்டப்படாமலேயே சம்பிரதாயமாக பூஜை போடப்பட்டன.

அனைத்து படங்களும் நல்லவிதமாக வெளிவரட்டும், வசூலை அள்ளட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X