'3 இடியட்ஸ்' Vs 'மை நேம் இஸ் கான்'!

By Staff

Sharukh, Gauri and Karan
வசூலில் சாதனை படைப்பது யார் என்பதில் ஆமிர்கானின் 3 இடியட்ஸ் படத்துக்கும், ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படத்துக்கும் கடும் மோதல் மூண்டுள்ளது.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் வெளியான படம் மை நேம் இஸ் கான். அதற்கு முன்பு வெளியாகி பரபரப்போடு ஓடிக் கொண்டிருப்பது ஆமிரின் 3 இடியட்ஸ்.

இந்த இரு படங்களுமே வசூலை வாரியள்ளிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பெரும் நஷ்டத்தை சந்தித்த பாலிவுட்டுக்கு இந்த இரு படங்களுமே பெரும் வசூல் மழையை வாரிக் கொண்டு வந்துள்ளன.

ஷாருக்கான் படம் இதுவரை உலகம் முழுவதும் 900 மில்லியன் ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. அதேசமயம், 3 இடியட்ஸ் படம் வெளியான முதல் நான்கு நாட்களில் 1 பில்லியன் ரூபாயை அள்ளியது.

3 இடியட்ஸ் படம் அமெரிக்காவிலும் சிறப்பாக ஓடி வசூலைக் குவித்தது. அதே போலத்தான் இப்போது ஷாருக் படமும் அமெரிக்காவிலும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தியாவில் மை நேம் இஸ் கானை திரையிட்டுள்ளது. அதன் கிளை நிறுவனமான பாக்ஸ் சர்ச்லைட் நிறுவனம் அமெரிக்காவல் திரையிட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளில் தாய் நிறுவனமான டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் திரையிட்டுள்ளது.

ஆமிர்கான், ஷாருக் கான் படங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள வசூல் போட்டியால் பாலிவுட்டினர் குஷியடைந்துள்ளனர். யார் வென்றாலும் அது இந்தி சினிமாவுக்கு நல்லதே என்பதால் வந்த குஷி இது.

தாக்கரேக்கள் வேற ரூட் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X