»   »  என்னைப் பார்த்து என் மகன் பயப்படுகிறான்-வனிதா

என்னைப் பார்த்து என் மகன் பயப்படுகிறான்-வனிதா

By Sudha
Subscribe to Oneindia Tamil
Vanitha
எனது மகனை விஜயக்குமார் தரப்பு மிரட்டி அச்சுறுத்தி வைத்துள்ளது. இதனால் என்னைப் பார்த்தாலே எனது மகன் நடுங்குகிறான் என்று கூறியுள்ளார் நடிகை வனிதா.

விஜயக்குமார் குடும்பத்துக்கும், வனிதாவுக்கும் இடையில் முதலில் மோதல் மீண்டது. பின்னர் இது வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையிலான மோதலமாக மாறியது.

இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் 10 வயதாகும் விஜய் ஸ்ரீஹரி. இவனை யார் வைத்து வளர்ப்பது என்பதில் தற்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சமீபத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீஹரியை கோர்ட்டுக்கு அழைத்து வந்தார் அவனது தந்தை ஆகாஷ்.அப்போது தனி அறையில் வனிதா, ஸ்ரீஹரியை சந்தித்துப் பேச அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மகனைப் பார்த்துப் பேசினார் வனிதா.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் மிரட்டி வைத்துள்ளார். என்னை பழிவாங்குவதற்காக எனது தந்தை விஜயகுமார் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார்.

விஜய் ஸ்ரீஹரியை தனியாக சிறை வைத்து, எதையோ சொல்லி அவனை பயமுறுத்தியுள்ளனர். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் மிரண்டுபோய் உள்ளான். என்னுடன் இருந்தபோது தங்கைகளுடன் பாசமாக இருப்பான். இப்போது அவர்களை பார்த்தால் விலகி ஓடுகிறான்.

விஜய் ஸ்ரீஹரி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். அவனது திடீர் மாற்றத்தால் எனது 2 பெண் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணா, அண்ணா என்று அவனது பாசத்துக்காக ஏங்குகிறார்கள்.

பள்ளிக்கு சென்ற இடத்தில் எனது 2 பெண் குழந்தைகளும் இதுபற்றி ஆசிரியர்களுடன் பேசியுள்ளனர். நீங்களாவது எங்கள் தாத்தாவுடன் பேசி, அண்ணாவை அனுப்பச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

பெற்ற தாய்க்குத்தான் பிள்ளை பாசம் தெரியும். நான் ஆசை ஆசையாய் வளர்த்த எனது மகன், என்னை வெறுக்கும் அளவுக்கு அவனது மனதை மாற்றியுள்ளனர். அவன் மனம் மாறி என்னுடன் மீண்டும் வருவான் என்று நம்புகிறேன் என்றார் வனிதா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Vanitha is upset over her son. She said to the mediapersons that, My son is terrorised by Actor Akash. My father Vijayakumar using Akash as a tool for his benefits. My son Vijay Sri Hari was so affectionate with my daughters. Now he is afraid of us, she charged.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more