செளந்தர்யா வழியில் ஐஸ்வர்யா தனுஷ்!

ரஜினிகாந்த்தின் இளைய வாரிசான செளந்தர்யாவை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அதை மறுத்து விட்ட செளந்தர்யா டைரக்டராக அவதாரம் எடுத்துள்ளார்.
ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான அனிமேஷன் படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதுதவிர ஆக்கர் ஸ்டுடியோ என்ற பெயரில் கம்ப்யூட்டர் அனிமேஷன் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனுஷின் மனைவியும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா, தங்கை வழியில் டைரக்டராக ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காக தனுஷின் அண்ணனான இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.
அவர் இயக்கி வரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உதவி இயக்குநர்களில் இப்போது ஐஸ்வர்யாவும் ஒருவர். ஏற்கனவே செல்வராகவனின் மனைவியும், முன்னாள் நடிகையுமான சோனியா அகர்வாலும், இப்படத்தின் உதவி இயக்குநராக சத்தம் போடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











