கலக்க வரும் கஜோல் குடும்பம்

By Staff

Ajay Devgan with Kajol and her motherTanuja
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் புதிய டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் அஜய் தேவ்கன், கஜோல் தம்பதியினர் நடுவர்களாக செயல்படுகின்றனர். கூடவே கஜோலின் அம்மாவும், முன்னாள் நடிகையுமான தனுஜாவும் இந்த குழுவில் இணைந்துள்ளார்.

வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு படையெடுக்கும் பிரபலங்கள் வரிசையில் லேட்டஸ்ட்டாக பாலிவுட் பிரபல நட்சத்திரங்களான அஜய் தேவ்கன், கஜோல் மற்றும் தனுஜா சேர்ந்துள்ளனர்.

ஏற்கெனவே பாலிவுட்டில் இருந்து வந்த அமிதாப் பச்சன், ஷாரூக்கான், ஆட்னன் சமி, சர்மிளா தாகூர், ஷங்கர் மகாதேவன், சரோஜ் கான், விஷால் சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சி நடத்துபவர்களாகவும், நடுவர்களாகவும் வந்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஜீ டிவி தயாரிக்கும், 'ராக் அன் ரோல் பேமிலி' என்ற டான்ஸ் நிகழ்ச்சிக்கு கஜோல் குடும்பத்தினர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் ஒரு அணியாக பங்கேற்கும் புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சி இது.

மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமைதோறும் ஜீ டிவியில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

செயின் ஸ்மோக்கரான அஜய் தேவ்கன், இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடுக்கான படப்பிடிப்பின்போது, உ.பி.யைச் சேர்ந்த ரோஹித், தன்வி ஜெயின் தம்பதியின் டான்ஸ் கான்செப்ட்டைப் பார்த்து நெகிழ்ந்து போய், அன்று முழுவதும் தம் அடிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டாராம். காரணம் ஜெயின் தம்பதியினர் எடுத்துக் கொண்ட டான்ஸ் தீம் - புகைப் பழக்கம் உடலுக்குக் கேடு!

அஜய் தேவ்கனின் இந்த முடிவை கஜோல் வெகுவாகப் பாராட்டினார். தனுஜாவும் மருமகனைப் பாராட்டினாராம்.

டிவி அதிகம் பார்த்தால் பல பாதிப்புகள் வரும் என்கிறார்கள். ஆனால் அஜய் தேவ்கனுக்கு ஏற்பட்ட பாதிப்பு ரொம்ப சந்தோஷமான விஷயம்தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X