பாடகரானார் முதல்வர் பேரன்!

By Staff

Arivunidhi with Srikanth Deva
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து இதோ இன்னொரு வாரிசும் திரைக் களத்தில் இறங்குகிறார். அவர் டாக்டர் அறிவுநிதி, முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன்.

சுந்தர்.சி, மீனாட்சி, நமீதா இணைந்து நடிக்கும் படம் பெருமாள் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடல் பாடுகிறார். 1980ல் பாக்யராஜ் இயக்கி நடித்து சக்கை போடு போட்ட படம் சுவர் இல்லாத சித்திரங்கள். இதில் வரும் காதல் வைபோகமே என்ற பாடல் கங்கை அமரனின் இசையில் படுபிரபலம் அன்றைக்கு.

அந்தப் பாடலைத்தான் பெருமாளுக்காக ரீமிக்ஸ் செய்கிறார் ஸ்ரீகாந்த் தேவா, அறிவுநிதியின் குரலில். இந்த பாடலை பாடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 30 நிமிடங்கள்தான். சில வாரங்களுக்கு முன்புதான் மு.க.முத்து மீண்டும் சினிமாவில் பாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மற்ற ரீமிக்ஸ் பாடல்களைப் போல அல்லாமல் இந்த பாடலில் வரிகள், இசை எதையும் மாற்றாமல் ரீமிக்ஸ் செய்கிறோம். அறிவுநிதிக்கு நல்ல இசைஞானம் உள்ளது. சீக்கிரம் கிரகித்துக் கொண்டு நன்றாகப் பாடுகிறார். 2005ல் அவர் பாடி வெளியான பக்தி ஆல்பம் கேட்டேன். அப்போதிலிருந்தே அவரைப் பாட வைக்க வேண்டும் என்று நினைத்து இந்த பாடலை பாட வைத்துள்ளேன்' என்றார் ஸ்ரீகாந்த் தேவா.

அறிவுநிதிக்கு நடிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். விரைவில் படம் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளாராரம்.

கலை(ஞர்) குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் சினிமாவில் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளது. தொடரட்டும்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X