ஒரு கார்டியாலஜிஸ்டின் சினிமா காதல்!

உண்மையில் இவர் ஒரு டாக்டர். ஹைதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கார்டியாலஜிஸ்ட். சென்னையில் பள்ளிப்படிப்பு, அர்மீனியாவில் மருத்துவப் படிப்பு முடித்தவர், டாக்டர் தொழிலோடு சேர்த்து நடிப்பையும் காதலித்தாராம்.
தமிழில் உன்னைப்போல் ஒருவன் முதல் படம் என்றாலும், அவர் ஏற்கெனவே தெலுங்கில் 18 படங்கள் முடித்துள்ளார்.
உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமலுடன் நடித்தது கனவா நிஜமா என்று இன்னும் அடிக்கடி கேட்டுக் கொள்வேன் எனும் பரத் நடிப்பில் இப்போது தெலுங்கில் தொடர்ந்து மூன்று படங்கள் வெளியாக உள்ளனவாம்.
"கமல், மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் என இந்தியாவின் டாப் க்ளாஸ் நட்சத்திரங்களுடன் நடித்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது. மோகன்லால் மாதிரி ஒரு இயல்பான நடிகரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.
கமல் சார் எனக்கு சொன்ன அறிவுரை, வருகிற படத்தையெல்லாம் ஒப்புக்கொள்ளாதே என்பதுதான். அதனால்தான் பல வாய்ப்புகள் வந்தும், நல்ல பெயரெடுக்கும்படியான பாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
எனக்கு வில்லத்தனம் கலந்த பாத்திரங்களில் நடிக்க மிகவும் ஆசை. அந்த மாதிரி வாய்ப்புகள் அமைந்தால் கலக்கலாம்", என்றார்.


Click it and Unblock the Notifications











