அபிராமி மாலில் 'க்ரேஸி கேம்ஸ்'

By Staff

Abirami Mega mall logo
சென்னை அபிராமி மெகா மாலில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் பொழுது போக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும விதத்தில் க்ரேஸி கேம்ஸ் எனும் புதிய வீடியோ கேம்ஸ் பகுதியைத் துவக்கியுள்ளனர்.

இது ஒரு வழக்கமான கேம் இல்லை. மனிதனோடு மனிதன் விளையாடுவதற்கு பதில் டெலிவிஷனோடு மனிதன் விளையாடுவது.

இதை விளையாட கீபோர்டு, மவுஸ் மற்றும் எந்த விதமான ஜாய் ஸ்டிக்கும் தேவையில்லை.

டெலிவிஷன் திரைக்கு ஒரு பத்தடி தூரத்தில் நின்று கொண்டு உங்கள் கையைக் காலை அசைத்தால் அதற்கேற்ப டெலிவிஷன் திரையும் செயல்படும்.

உதாரணத்துக்கு டிவியில் ஒருவர் டென்னிஸ் பந்தை எடுத்து உங்களை நோக்கி வீசுகிறார். நீங்களும் பதிலுக்கு கையால் அந்தப் பந்தை திருப்பி அடிக்கலாம். அப்படிச் செல்லும் பந்து திரும்ப உங்களை நோக்கி வரும். இதற்கு ரிமோட் சென்சார் எனும் கருவியை உங்கள் கையில் கட்டிவிடுவார்கள். இந்த விளையாட்டுக்கு வி (WII) என்று பெயர்.

கை கால்கள் மற்றும் உடல் முழுவதையுமே அசைத்து நீங்கள் இங்கே விளையாடுவதால் உடற்யிற்சியுமாச்சு, விளையாட்டுக்கு விளையாட்டுமாச்சு...

பைக் ரேஸ், மல்யுத்தம், பாக்ஸிங், கார் சேஸ் என பல விளையாட்டுககளை இங்கே விளையாட முடியும்.

சனிக்கிழமை காலை நடந்த இந்த க்ரேஸி கேம்ஸ் துவக்க விழாவில் நடிகர் சிபி, தயாரிப்பாளர் ப.அரு.சுப்பிரமணியன், அபிராமி மெகாமால் இயக்குநர் அபிராமி ராமநாதன், அவர் மனைவி நல்லம்மை ராமநாதன், மகன் சிவலிங்கம், மகள் மீனாட்சி பெரிய கருப்பன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆதம்பாக்கம் ராமதாசு ஆகியோர் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X