தெலுங்கு சந்திரமுகி.. ஒரே காட்சியில் கலக்கும் ரஜினி!!
சந்திரமுகியின் இரண்டாம் பாகம் நாகவள்ளி எனும் பெயரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தி்ல ரஜினி வரும் ஒரு காட்சியில் திரையரங்குகள் அதிர்கின்றன, ரசிகர்களின் விண்ணைப் பிளக்கும் கரகோஷம் மற்றும் விசில் சத்தத்தில்.
கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆப்தமித்ரா, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க சந்திரமுகியாக வெளியாகி, 804 நாட்கள் வரை ஓடி சரித்திரம் படைத்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் ஆப்தரக்ஷகா என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை மீண்டும் ரஜினியை வைத்து சந்திரமுகி - இரண்டாம் பாகம் என உருவாக்க விரும்பினார் வாசு. ஆனால் முதலில் பார்க்கலாம் என்று கூறிய ரஜினி, பின்னர் அஜீத்தை நடிக்கச் சொல்லி சிபாரிசு செய்தார்.
ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறாத நிலையில், வெங்கடேஷை வைத்து தெலுங்கில் இயக்குமாறு பரிந்துரை செய்தார் ரஜினி. கூடவே, அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் கொடுத்தார் ரஜினி. ஆனால் இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டது.
இப்போது படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத சமயத்தில் ஒரு காட்சியில் தோன்றுகிறார் ரஜினி. அவரது கதைப்படி ரஜினியின் சிஷ்யர்தான் படத்தின் ஹீரோ வெங்கடேஷ். இந்தக் காட்சிக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரசிகர்கள் அபார வரவேற்பு கொடுத்து மகிழ்கின்றனர்.
வெங்கடேஷ், அனுஷ்கா, கமலினி முகர்ஜி, வினய் பிரசாத் நடித்துள்ள இந்தப் படம் வெளியான இன்றே வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிப்புத் துறையில் 25-ம் ஆண்டில் கால்பதிக்கும் வெங்கடேஷுக்கு மிக முக்கிய படமாக நாகவள்ளி அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











