இந்தி கஜினி விற்பனையில் சாதனை!

சூர்யா, ஆசின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இப்போது இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சூர்யாவுக்குப் பதில் அமீர்கான் நடித்துள்ளார். ஆசின் அதே கேரக்டரில் நடித்துள்ளார். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் இப்போது பெரிய விலைக்கு விற்றுள்ளதாம். அதாவது ரூ. 90 கோடிக்கு படத்தை விற்றுள்ளனர்.
இந்தியாவில் வெளியிடும் உரிமை ரூ. 50 கோடிக்கும், வெளிநாடு, சாட்டிலைட் உரிமை மற்றும் வீடியோ பாடல் உரிமை ரூ. 40 கோடிக்கும் விற்றுள்ளதாம்.
இது இந்தித் திரையுலகில் பெரும் சாதனை. இதற்கு முன்பு ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் ரூ. 73 கோடிக்குத்தான் விற்றது. தற்போது அமீர்கானின் கஜினி அதை முறியடித்து விட்டது.
இந்தி கஜினிக்கு பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் படம் பெரிய விலைக்கு விற்றுள்ளதால் அது இரட்டிப்பாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











