'பிக் பாஸ்'..வருகிறார் ஷில்பாவுடன் மோதிய ஜேட்!

லண்டன் டிவி நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில், ஷில்பா ஷெட்டியை கேலி செய்து, இன ரீதியாக கிண்டலடித்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஜேட் கூடி. பின்னர் ஷில்பாவிடம் மன்னிப்பு கேட்டார். பகிரங்கமாக இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் இந்தியாவின் கலர்ஸ் டிவி நடத்தவுள்ள பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஜேட் கூடி பங்கேற்கவுள்ளார்.
வேடிக்ைக என்னவென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனின் ஹோஸ்ட் ஆக ஷில்பா ஷெட்டி செயல்படவுள்ளார் என்பதுதான்.
லோனாவாலாவில் இந்த ரியாலிட்டி ஷோ நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி முதல் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பிற போட்டியாளர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இருப்பினும் பழம்பெரும் நடிகர் ரஸா முராட், பாடகர் பபுல் சுப்ரியோ ஆகியோரை கலர்ஸ் டிவி அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











