மாமியார் ஆவாரா ஜெயப்பிரதா?

ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் மாப்பிள்ளை. இப்படத்தில் அவரது மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா. ரஜினி கேரக்டருக்கு நிகராக இந்த கேரக்டரும் பேசப்பட்டது.
கோடீஸ்வர மாமியாராக வந்து கலக்கலான நடிப்பைக் கொடுத்திருந்தார் ஸ்ரீவித்யா. தற்போது இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர்.
ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் மாமியார் ரோலில் நடிக்க பல முன்னணி, மூத்த நடிகைகளை அணுகினர். ஸ்ரீதேவியை முதலில் அணுகினர். பிறகு தபுவைக் கேட்டுப் பார்த்தனர். எந்த மாமியாரும் தகையவில்லை.
இதையடுத்து தற்போது ஜெயப்பிரதாவை அணுகியுள்ளனராம். இவர் கேட்கப் போகும் சம்பளத்தைப் பொறுத்து, அவர் நடிப்பாரா, இல்லையா என்பது தெரிய வருமாம்.
ஹீரோயின் கிடைக்கத்தான் கஷ்டப்படுவார்கள். மாமியார் ரோலுக்கும் ஆள் கிடைப்பதில் இவ்வளவு சிரமமா...?
Comments
ஜெயப்பிரதா மாப்பிள்ளை மாமியார் ஸ்ரீதேவி ஸ்ரீவித்யா jayapradha maapillai mom in law sridevi srividhya


Click it and Unblock the Notifications