காங்கிரசில் நடிகை ஜெயசுதா

By Staff

Jayasudha and Sarath kumar
ஹைதராபாத்: பிரபல நடிகை ஜெயசுதா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

சிரஞ்சீவி தனிக் கட்சி தொடங்கியதில் இருந்து ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் கலகலத்துப் போயுள்ளன. என்.டி.ராமா ராவின் மகன் கிருஷ்ணாவை தெலுங்கு தேசத்துக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் இறக்கிவிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதே போல ராமா ராவ் குடும்பத்தைச் சேர்ந்த அரை டஜன் திரைப்பட நட்சத்திரங்களும் தெலுங்கு தேசத்துக்காக கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து சினிமா கவர்ச்சியை சினிமாவாலேயே சமாளிக்க முடிவு செய்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, பல முன்னணி நட்சத்திரங்களை காங்கிரசுக்குள் இழுத்து வருகிறார்.

அவரது முயற்சியால் சமீபத்தில் திரைப்பட தம்பதிகளான நடிகர் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா, கிருஷ்ணா-விஜய நிர்மலா, நகைச்சுவை நடிகர் ஸ்ரீஹரி, சுப்பிரமணியம் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அதே போல நடிகை கவிதாவும் காங்கிரஸ் சேரவுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஜெயசுதா காங்கிரசில் இணைந்துள்ளார். தெலுங்கில் ராமாராவ் உள்ளிட்ட பல பழம்பெரும் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர். இப்போதும் தெலுங்குத் திரைப்படங்களில் பிஸியாக உள்ளார்.

ஹைதராபாத் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான காந்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சினிவாசு ஆகியோர் முன்னிலையில் நடிகை ஜெயசுதா காங்கிரசில் இணைந்தார்.

அவருக்கு முதல்வர் ராஜசேகரரெட்டி மாலை அணிவித்து பூச்செண்டு வழங்கி கட்சியில் இணைத்தார்.

ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அடித்தளத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிவதை நேரில் பார்த்து உணர்ந்த பின் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதாக ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் அவர் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X