ஸ்டிரெச்சரில் வந்து ஓட்டுப் போட்ட ஜூனியர் என்டிஆர்

அவருடன் அவரது தாயாரும் உடன் வந்தார். தெலுங்கு தேசம் கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் செய்தவர் ஜூனியர் என்.டி.ஆர். அப்போது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இருப்பினும் கண்டிப்பாக தான் ஓட்டுப் போடுவேன் என கூறியிருந்தார்.
அதன்படி மெகதிப்பட்டனத்தில் உள்ள செயின் ஆன் பள்ளிக்கு அவர் ஸ்டிரெச்சரில் வந்தார். பின்னர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஸ்டிரெச்சரில் படுத்தபடியே வாக்களித்தார்.
மார்ச் 26ம்தேதி ஜூனியர் என்.டி.ஆர். விபத்தில் சிக்கினார். அதன் பின்னர் 15 நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர் படுக்கையில் படுத்தபடியே தெலுங்கு தேசம் கட்சிக்காக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
andhra ஆந்திரா இந்தியா ஓட்டு ஜூனியர் என்டிஆர் தெலுங்கு தேசம் தேர்தல் 2009 ஸ்டிரெச்சர் election 2009 junior ntr stretcher tdp vote


Click it and Unblock the Notifications