Don't Miss!
- Sports என்ன டா இப்படி ஏமாத்துறீங்க? இது எப்படி அவுட்டாகும்? நடுவரின் தவறான முடிவு.. கடுப்பான விராட் கோலி
- News தேர்தலுக்கு பிறகு மொத்தமாக சென்னை திரும்பும் பொதுமக்கள்.. திணறும் பரனூர்! அப்போ பெருங்களத்தூர் நிலை?
- Technology புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- Lifestyle உங்க உதடுகள் கொஞ்சம் கொஞ்சமா கருப்பா மாறுதா? அப்ப இந்த பிரச்சினைகளில் ஒன்று உங்களுக்கு இருக்காம்...!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அடுத்த 'தாடி' யாரு...? - கலாய்த்த பார்த்திபன்
எந்த கான்ட்ராவர்ஸியும் இருக்கக் கூடாது என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லி விட்டார்களோ என்னமோ... பொதுவாகப் பேசிவிட்டு அமர்ந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர்கள். படத்தின் நாயகன் பாலாஜி, அமைச்சர் பரிதி இளம்வழுதியின் நெருங்கிய உறவினர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!
எல்லோருமே சொல்லி வைத்த மாதிரி படத்தின் நாயகி மேக்னா சுந்தர்ராஜை ஓஹோவென புகழ்ந்து தள்ளினர். இவர் நடித்த முதல்படம் பாலச்சந்தர் தயாரிப்பில் உருவாகி இன்னும் வெளிவராமல் உள்ள கிருஷ்ணலீலை. அடுத்து நந்தா நந்திதா படத்தில் நடித்து வருகிறார்.
விழாவில் பேசிய அனைவரும் 'நயன்தாராவைப் பிரதியெடுத்த மாதிரி இருக்கிறார் மேக்னா... அடுத்த நயன்தாரா இவர்தான்' என்று சொல்லிக் கொண்டே போக வெட்கத்தில் 'ரோஸ்' பூசிக் கொண்டது மேக்னாவின் முகம்.
ரொம்ப நேரமாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குசும்புப் பார்ட்டியான பார்த்திபன் சும்மா இருப்பாரா.. நேராக மைக் முன் வந்தவர், "டான்ஸ் யூனியனில் பெரிய பிரச்சினை வெடிச்சிருக்கு!" என்றார் சீரியஸாக.
எல்லோரும் என்னமோ ஏதோ என்று பரபரப்புடன் நிமிர, அடுத்த வெடியை இப்படி வீசினார்...
"ஆமாங்க... இந்த 'நயன்தாரா'வின் கைப்பிடிக்கப் போகும் அடுத்த தாடிக்கார டான்ஸ் மாஸ்டர் யாருன்னு இப்பவே அடிச்சிக்கிறாங்களாம்...!" என்று கூற, தியேட்டர் கொள்ளாத சிரிப்பலை!