இந்தி தசாவதாரத்தில் 'பெங்காளி பாபு'வான பல்ராம் நாயுடு!

By Staff

Kamal
தசாவதாரம் படத்தின் இந்திப் பதிப்பில் கமல்ஹாசனின் பல்ராம் நாயுடு பாத்திரம் பெங்காளி பாபு என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கலைஞானி கமல்ஹாசனே பத்திரிகையாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

ஹைதராபாதில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது:

இப்போது உன்னைப் போல் ஒருவன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும். அடுத்து 19 ஸ்டெப்ஸ் படத்திலும் நடிக்கிறேன். இந்தப் படங்களுக்குப் பின் ஒரு இந்திப் படத்தை உருவாக்கும் திட்டம் உள்ளது. அந்தப் படத்திலும் எனது பாத்திரத்தில் ஒரு சின்ன ஆச்சர்யம் இருக்கும்.

நாளை (ஏப்ரல் 17) என்னுடைய தசாவதாரம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தப் படத்தில் ஒரு சின்ன மாறுதல்... வேறு ஒன்றுமில்லை, ஆந்திராக்காரராக வரும் பல்ராம் நாயுடு, இந்தியில் பெங்காளி பாபுவாக வருகிறார்.

மற்றபடி தமிழில் இருந்த அத்தனை விஷயங்களும் இந்தியில் அப்படியே உண்டு.

எல்லோரும் நான் 10 வேடங்களில் நடித்ததைப் பெருமையாகப் பேசுகிறார்கள். இது ஒரு விஷயமே அல்ல... சிவாஜி பிறந்த மண்ணிலிருந்து வந்தவன் நான். பழைய தெருக்கூத்துக்களில் ஒருவரே பல வேடங்களில் போட்டு நடித்திருப்பாரகள். அது இந்த மண்ணுக்கே உரிய கலாச்சாரம், என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X