பாலச்சந்தர்- மனோரமாவுக்கு பாராட்டு விழா: முதல்வர் தலைமை

By Staff

Manorama with Kamal
இயக்குநர் சிகரம் பாலசந்தர் மற்றும் ஆச்சி மனோரமாவுக்கு சென்னையில் செப்டம்பர் மாதம் பாராட்டு விழா நடைபெறுகிறது.

தமிழ்த் திரையுலகம் சார்பில் நடக்கும் இப்பாராட்டு விழாவில் முதல்வர் கலைஞர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள்.

கலைத்துறையில் நீண்டநாள் சிறப்பாக பணியாற்றியதற்காக பாலசந்தருக்கும், மனோரமாவுக்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் இந்தத் தகவலை இப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அறிவித்தனர்.

தமிழ்க் கலைஞர்கள் இருவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் கௌரவத்துக்கு ஆளாகியிருப்பது தமிழ்த் திரையுலகுக்கே பெருமை என்பதால், இந்நிகழ்வை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர் திரையுலகினர்.

டாக்டர் பட்டம் பெறும் இவர்களுக்கு செப்டம்பர் மாதம் சென்னையில் பாராட்டு விழா நடத்த திரையுலகப் பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சில், இயக்குநர்கள் சங்கம் என அனைத்து அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விழாவில் ரஜினி, கமல் உள்பட பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

பாலச்சந்தர், மனோரமா இருவருக்குமே மிகவும் நெருக்கமான முதல்வர் கலைஞர் தலைமையில் இவ்விழா நடத்தப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X