நலமாக உள்ளார் மணிரத்னம்!

By Staff

Manirathnam with Suhasini
'மணிரத்னம் இப்போது நலமாக உள்ளார். இன்னும் இரு தினங்களில் வழக்கமான பணிகளுக்குத் திரும்பிவிடுவார்' என அவரது மீடியா மேனேஜர் நிகில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இயக்குநர் மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சு விட சிரமப்பட்டார். இதனால் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர் அவரது குடும்பத்தினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணி ரத்னத்துக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சைகள் தரப்படன. நேற்று பிற்பகலுக்குப் பின் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

இப்போது அவர் நலமாக உள்ளார் என்றும், இன்னும் இரு தினங்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் ராவண் படப்பிடிப்புக்காக கேரளாவின் சாலக்குடி காட்டுக்குப் புறப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, அவரது மீடியா மேனேஜர் நிகில், இப்போது மணிரத்னம் சார் நல்ல நிலையில் உள்ளார். இன்னும் இரு தினங்களில் வீடு திரும்புகிறார். விரைவில் துவங்கவிருக்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்கிறார், என்றார்.

மன உளைச்சல் காரணமா?:

மணிரத்னம் ஏற்கெனவே இருமுறை நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டுள்ளவர். ஆனால் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவரது படங்கள் மாட்டிக் கொள்கின்றன. பம்பாய், இருவர், குரு போன்ற படஹ்கள் வெளியாகும் தருணங்களில் அவருக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் படங்களை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் காட்டி, அவர்களின் ஒப்புதலுடன் வெளியிட்டவர் மணிரத்னம்.

இந்த முறை பெரும் பொருட்செலவில் தனது ராவண் படத்தை எடுத்து வருகிறார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின் கதை விவகாரமானது.

தன்னைக் கட்டிய கணவனின் சுயரூபம் புரிந்து, சிறைப்பிடித்த வில்லனிடமே இறுதியில் மனதைப் பறிகொடுக்கும் ஒரு மனைவியின் கதைதான் ராவண் என்று கூறப்பட, 'ராமாயணத்தை இழிவுபடுத்துவதா?' என இந்துத்துவா அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள் அவருக்கு மன உளைச்சலைத் தந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் இதுகுறித்த செய்திகளே வட இந்திய மீடியாவை பெரிதும் ஆக்கிரமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X