மீண்டும் மணிரத்னம் படத்தில் கமல்?

குரு படத்திற்குப் பிறகு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் விக்ரம் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது திடீர் திருப்பமாக விக்ரம் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
இதனால் அந்த ரோலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க தீர்மானித்துள்ளார் மணிரத்னம். இதுதொடர்பாக கமல்ஹாசனையும் அவர் அணுகியுள்ளார்.
கடைசியாக இருவரும் இணைந்த படம் நாயகன். அப்படம் பெரும் வரலாறு படைத்த படம். கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருதை வாங்கிக் கொடுத்தது. இசையிலும், நடிப்பிலும், கதையிலும் வெகுவாக பேசப்பட்ட படம் நாயகன்.
இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கமலைத் தேடி வந்துள்ளது. அவர் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் வலுத்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications