கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு - ட்ரைலர் வெளியீடு
கமல்ஹாஸனின் அடுத்த வெளியீடான மன்மதன் அம்பு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
கமல் - த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்துள்ள இந்தப் படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
மன்மதன் அம்பு டிரைலர்
படத்தின் 95 சதவீதம் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. உலகின் படு சொகுசான கப்பல் ஒன்றில் 45 நாட்கள் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இசைவெளியீடு சிங்கப்பூரில் விரைவில் நடக்கவிருக்கிறது.
டிசம்பரில் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் மன்மதன் அம்பு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.!


Click it and Unblock the Notifications











