புது பொலிவுடன் 'நீ பாதி நான் பாதி'!

மெகா டிவியில் ஞாயிறு தோறும் பகல் 12.00 மணிக்கும், வெள்ளி இரவு 8.00 மணி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர்கள் விறுவிறுப்பான நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும்.
முதல் சுற்றில் ஒரே வகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் கணவரோ அல்லது மனைவியோ சைகைகள் மூலம் நடித்துக்காட்டி கொடுக்கப்படும் திரைப்பட பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். இறுதிச் சுற்றில் கணவரைப் போல் மனைவியும், மனைவியைப் கணவரும் நடிக்க வேண்டும். போல் தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தம்பதிகள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி தற்போது புதுபொலிவுடன் புதிய அரங்கத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் குதூகலிக்கும் இந்த நிகழ்ச்சியினை கலகலப்பான நகைச்சுவை கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்குகிறார் நடிகர் பாண்டியராஜன்.


Click it and Unblock the Notifications











