ராமதாஸ் தலைமையில் சந்தனக்காடு வெற்றி விழா!

இயக்குதர் வ.கெளதமன் இயக்கத்தில் வெளிவந்த இத்தொடர் மக்கள் தொலைக்காட்சியில் 171 நாள் ஒளிபரப்பானது.
மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இத்தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந் நிலையில் சந்தனக்காடு தொடரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இராயப்பேட்டை மியூசிக் அகாடெமியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் மகேந்திரன், கலைப்புலி தாணு, பாலா, முத்துக்குமார், பத்மாவதி விவேகானந்தன், கண்மணி குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இரவு எட்டு மணியளவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகிறார். வ.கெளதமன், கராத்தே இராசா ஏற்புரையாற்றுகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications