குஷ்பு மீதான 'கற்பு' வழக்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை

தமிழ் பெண்களின் கற்பு குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து பேட்டி அளித்ததாக நடிகை குஷ்புவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நடிகை குஷ்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பேச்சுரிமையை பறிக்கும் வகையில் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பெஞ்ச் குஷ்புவுக்கு எதிரான 23 வழக்குகளை சென்னைக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications











